சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தகவல்
சிவகங்கை , செப். 06 : பிறப்பு பதிவேட்டில் பிறப்பு பதிவு செய்யப்பட்டு, குழந்தையின் பெயர் சேர்க்கப்படாமல் உள்ளவர்கள் வரும் செப்டம்பர் 26 -ஆம் தேதிக்குள் குழந்தையின் பெயரைச் சேர்த்து பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு விதிகள் 2000 நடைமுறைக்கு வருவதற்கு முன்பும், அதற்குப் பிறகும் நிகழ்ந்த பிறப்புகளில் – பிறப்பு பதிவேட்டில் பிறப்பு பதிவு செய்யப்பட்டு குழந்தையின் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தால் அந்தப் பெயரைப் பிறப்பு பதிவேட்டில் சேர்க்க அரசு கால அவகாசம் வழங்கியுள்ளது.
அதன்படி குழந்தையின் பெயர் சேர்க்கப்படாமல் உள்ள பழைய பிறப்புப் பதிவுகளில் குழந்தையின் பெயரைச் சேர்த்து, குழந்தையின் பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழைப் பெறுவதற்கான சிறப்பு கால அவகாசம் 26.09.2026 வரை வழங்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது பிறப்பு பதிவு செய்யப்பட்டுள்ள உள்ளாட்சி அலுவலகத்தில் தங்களது உரிய விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் தங்களது பகுதி கிராம நிர்வாக அலுவலர் (VAO) மூலமாகவும், பேரூராட்சி மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் வசிப்பவர்கள் சம்பந்தப்பட்ட பேரூராட்சி அல்லது நகராட்சி அலுவலகங்களிலும் தேவையான விவரங்களை கேட்டு சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.
பிறப்பு பதிவு செய்யப்பட்டும் பெயர் சேர்க்கப்படாமல் உள்ளவர்கள், பெயரில்லாத பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து இந்தச் சிறப்பு வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் பி.ஆகாஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.
கால அவகாசம் நிறைவடைவதற்கு முன்பாகவே விண்ணப்பித்து, பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் தகவல்களுக்கு : https://sivaganga.nic.in/

1 Comment
Hi, this is a comment.
To get started with moderating, editing, and deleting comments, please visit the Comments screen in the dashboard.
Commenter avatars come from Gravatar.